மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
07-Jul-2025
திருத்தணி:பேருந்து பயணியரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, வாலிபர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்த பயணியரை, ஆபாசமாக திட்டி கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக, திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை பிடித்தனர். விசாரணையில், திருத்தணி இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் விஷ்ணு, 25, என்பது தெரியவந்தது. விஷ்ணுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
07-Jul-2025