உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த 3 பேர் கைது

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த 3 பேர் கைது

திருவாரூர்:திருவாரூர் அருகே,காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில், மலம் கலந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.திருவாரூர் அருகே, காரியாங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி குடிநீர் தொட்டியில், கடந்த, 14ம் தேதி மலம் கலந்ததாக கூறப்படுகிறது. விசாரித்த போலீசார், அதே ஊரை சேர்ந்த, விஜயராஜ், 36, செந்தில், 38, காளிதாஸ், 25 ஆகியோரை நேற்று கைது செய்து, திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி