உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / சிறுமியிடம் சில்மிஷம்

சிறுமியிடம் சில்மிஷம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பனங்குடியை சேர்ந்த பாலா என்பவரின் மகள், 9 வயது சிறுமி. இவரது வீட்டு நாய் குட்டி, வீட்டில் இருந்து, 6ம் தேதி வெளியே ஓடியது. அதை பிடிப்பதற்காக, சிறுமி தெருவில் விரட்டி வந்துள்ளார்.அப்போது, அதே தெருவை சேர்ந்த ஆகாஷ், 25 என்ற வாலிபர், சிறுமியின் வாயை பொத்தி, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை, போலீசில் புகார் செய்தார். நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று முன்தினம், ஆகாஷ் மீது, போக்சோவில் வழக்கு பதிந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை