மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி விவசாயி பலி
25-Dec-2024
திருவாரூர்: திருவாரூர் அருகே தியானபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் மனைவி ரஷியா, 55. தம்பதிக்கு மூன்று மகன்கள். ஜெயபால் இறந்துவிட்டார். மூத்த மகன் ஜெயராஜ், 27. திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.இவர்களது வீட்டின் பக்கத்தில், தாய் ரஷியாவும், மூன்றாவது மகன் ஜெயராமன், 23, என்பவரும் வசித்தனர். அண்ணன், தம்பி இருவரும் வெல்டராக பணிபுரிந்தனர்.நேற்று முன்தினம் இரவு, ஜெயராஜுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது, அண்ணிக்கு ஆதரவாக ஜெயராமன் பேசினார். பின், ஜெயராமன் துாங்க சென்றார். ஆத்திரம் தீராத ஜெயராஜ், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, தாய் வீட்டிற்கு சென்று, ஜெயராமனை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த ஜெயராமன், அதே இடத்தில் இறந்தார்.திருவாரூர் தாலுகா போலீசார், ஜெயராஜ் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
25-Dec-2024