உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / பேராசிரியைக்கு தொல்லை கல்லுாரி முதல்வர் சிக்கினார்

பேராசிரியைக்கு தொல்லை கல்லுாரி முதல்வர் சிக்கினார்

நன்னிலம்,:நன்னிலம் அரசு கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லுாரி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஓராண்டாக ராமசுப்ரமணியம் முதல்வராக இருந்து வருகிறார். இக்கல்லுாரி இயற்பியல் துறையில், ஆறு ஆண்டுகளாக பெண் ஒருவர் கவுரவ விரிவுரையாளராக உள்ளார். இவருக்கு, ராமசுப்ரமணியம், சில மாதங்களாக மொபைல்போனில், 'மெசேஜ்' அனுப்புவது, 'உனக்கு என்ன தேவையோ கேள்; செய்து தருகிறேன்' என, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.அதிர்ச்சியடைந்த கவுரவ விரிவுரையாளர், நன்னிலம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். கல்லுாரி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ் நாட்டு அறிவாளி
ஜூன் 02, 2025 14:03

ஏதோ ஒரு டிகிரி படித்து விட்டு ஒரு அரசு வேலையில் சேரவேண்டியது. மாச மாச சம்பளம் வேலை செய்யாமல் வாங்கி கொண்டு பொம்பளை பிள்ளை கையை புடிச்சு இழுக்க வேண்டியது.