உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதை பணியை துவங்கணும்

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதை பணியை துவங்கணும்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதை பணியை உடன் துவங்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் மற்றும் சேவை சங்கங்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .இந்தியா முழுவதும் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மத்திய அரசு மாற்றி வருகிறது. முதல், முதலாக ரயில் சேவை துவங்கிய சென்னை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, ராமேஸ்வரத்தில் உள்ள வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றுவதுக்கான பணிகள் நடக்க வில்லை.முதல் கட்டாமாக, 2009 - 2010ம் ஆண்டில் மத்திய அரசு திருவாரூர், காரைக்குடி ரயில் மார்க்கத்தை அகலப்படுத்த பாதி த்தொகையை ஒதுக்கி அறிவித்து இருந்தது. கடந்த ஆறு மாதத்துக்கு முன் திருத்துறைப்பூண்டிக்கு வருகை புரிந்திருந்த திரு ச்சி கோட்ட மோலாளர் திருவாரூர் மயிலாடுதுறை ரயில் சேவை துவங்கியவுடன் திருவாரூர், திரு த்துறைப்பூண்டி, அகஸ்த்தியம்பள்ளி வரையுள்ள ரயில் பாதை அகலப்படுத்தும் பணி துவங்கப்படும் என அறித்து சென்றார்.ஆனால், தற்போது பட்டுக்கோட்டை காரைக்குடி வரையிலான அகல ரயில்பாதை அகலப்படுத்தும் பணி துவங்கும் என செய்தி வெளியாகியுள்ளது. திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கம் சார்பில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி அகல ரயில்பாதையை உடனடியாக பணி துவக்க வேண்டும் என சர்வ கட்சியினர், சேவை சங்கங்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் வர்த்த சங்க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.யூனியன் தலைவர் தமிழ்செல்வி, நகராட்சி துணை தலைவர் பாண்டியன், திருவாரூர், நாகை மாவட்டங்களின் வர்த்த சங்க தலைவர் சிவசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகநாதன் எம்.எல்.ஏ., நாகை தொகுதி எம்.பி., விஜயன், முத்துப்பேட்டை வணிகர் சங்க தø லவர் மாணிக்கம், திருத்துறைப்பூண்டி ரோட்டி, லயன்ஸ், ஜேசி ஸ், பொறுப்பாளர்கள் ,கிளை வர்த்த சங்க பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முதல் கட்டமாக திருச்சி கோட்ட மேலாளாரை சந்தித்து உடனடியாக இப்பகுதி அகல ரயில்பாதை பணியை துவங்க உறுதியளிக்க வேண்டும் என கேட்டு கொள்வது, உறுதியளிக்காவிட்டால் திருத்துறைப்பூண் டி, முத்துப்பேட்டை, வே தை, தலைஞாயிறு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கடையடை ப்பு போராட்டம், தொடர் வே லை நிறுத்த போராட்டம் இரண்டாம் கட்டமாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ