உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / பள்ளி செல்லா மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பு

பள்ளி செல்லா மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நறிகுறவர் காலனியில் சமுதாய கூடத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா உதவி தொடக்க கல்வி அலுவலர் விக்டர்ராஜ் தலைமையில் நடந்தது. கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் விஜயேந்திரன், மேற்பார்வையாளர் ஜான்பிரிட்டோ ஆகியோர் பங்கேற்று 42 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மதிப்புள்ள சீருடை, காலணி, எழுது பொருட்கள், நோட்டுக்கள் வழங்கி மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து விளக்கி பேசினார். மாதம் தோறும் இந்த பயிலரங்கம் நடக்கிறது. இதில் சமூதாய கூடபள்ளி தாளாளர் சந்திரா, தலைமையாசிரியை வனஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை