உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / "நல்லாசிரியருக்கு மாணவர் வாழ்த்து

"நல்லாசிரியருக்கு மாணவர் வாழ்த்து

மன்னார்குடி: தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுப்பெற்ற, மன்னார்குடி தேசியப் பள்ளி ஆசிரியரை பள்ளி மாணவர்கள் வணங்கி வாழ்த்தினர். ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேதுராமனுக்கு, கல்வித்துறை அமைச்சர் சண்முகம், தமிழக அரசின் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதினை வழங்கினார். விருதுப்பெற்ற சேதுராமன், தேசிய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 32 ஆண்டுகளாக ஆசிரியராகவும், 15 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் தொடர்ந்து பணிபுரிந்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு கம்ப்யூட்டர் கல்வியை சிறப்பாக பள்ளியில் செயல்படுத்தியதுக்காக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கையினால் விருது பெற்றவர். கடந்த 2004ம் ஆண்டு ஆங்கில வழிக்கல்வியை கிராமப்புறங்களில் சிறப்பாக சென்று சேர்ந்தமைக்காக, அன்றைய தமிழக கவர்னர் பர்னாலாவிடமும் விருது பெற்றுள்ளார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு, மாணவர்கள் பலரை பலமுறை தயார் செய்து, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பரிசுகளை வென்றுள்ளார். தற்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுப் பெற்ற சேதுராமனை, பள்ளி மாணவர்கள் வணங்கி வாழ்த்தினர். ஆசிரிய, ஆசிரியைகள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை