உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / டூவீலரில் "சரக்கு 2 வாலிபர் கைது

டூவீலரில் "சரக்கு 2 வாலிபர் கைது

வேலூர் மன்னார்மன்னார்குடி: கூத்தாநல்லூரில் டூவீலரில் வெளி மாநில மதுபானப் பாட்டில்களை கடத்திச் சென்ற இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர்-மன்னார்குடி சாலையில், ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி அதிவேகமாகச் சென்ற, 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' பைக்கை மறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 32 வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தன. பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், பைக்கில் வந்த, மன்னார்குடி வாணக்காரத் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சபரிநாதன் (24), சிங்கன்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமார் (31) ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி