உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / மாணவர்களுக்கு மனவளப் பயிற்சி

மாணவர்களுக்கு மனவளப் பயிற்சி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு மனவளக்கலை பயிற்சி நடந்தது. திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் மனவளக்கலை மன்றம் சார்பில், எளிய முறை உடற்பயிற்சிகள், காயகல்ப பயிற்சி, தியான பயிற்சிகள் உள்ளடக்கிய, 'முழுமை நலவாழ்வுக்கு மனவளக்கலை யோகா' என்ற மாணவருக்கான 12 நாள் சிறப்பு பயிற்சி நடந்தது. முதுகலை தமிழாசிரியர் ஷாகுல் ஹமீது தலைமையில், தாவரவியல் ஆசிரியர் வெங்கட சுந்தரம், மனவளக்கலை மன்றப்பொருளாளர் மாணிக்கம், செயலாளர் வெங்கட்ராமன், ஆசிரியைகள் கனகவள்ளி, வைஜெயந்தி மாலா ஆகியோர் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்து கூறினர். சிலவகையான உடற்பயிற்சிகளை செய்துக் காட்டி, மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கரபாணி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை