உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / முத்துப்பேட்டை டவுன் பஞ்., தலைவருக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்

முத்துப்பேட்டை டவுன் பஞ்., தலைவருக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று வரை எட்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க., சார்பில் தமிம், பா.ஜ.க., கட்சி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவா ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு ஐந்து பேரும், முத்துப்பேட்டை யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு 33 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். 29 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 74 பேரும் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முத்துப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஏழாவது வார்டு சிட்டிங் தி.மு.க., கவுன்சிர் ஜபருல்லா, தற்போது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவரை எதிர்த்து தி.மு.க., சார்பில், உனக்கு போட்டியிட தகுதியில்லை, கட்சி சார்பில் போட்டியிட முடியாது என கூறினர். அதனால் ஜபருல்லா சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ