மருந்து கடையில் போதை பொருள் விற்றவர் கைது
குடவாசல்:குடவாசலில், மருந்துகடையில், போதை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம், குடவாசலில், தனியார் மருந்து கடை ஒன்றில், போதை பொருட்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. 1040 ரூபாய் மதிப்பிலான, போதை பொருட்களை பறிமுதல் செய்து, வேறு ஒருவரின் பெயரில், மருந்து கடையை நடத்தி வரும், தமிமுன் அன்சாரி, 33 என்பவரை கைது செய்தனர்.