உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / பயிரிட்ட நெற்பயிர் சேதம் விவசாயி தற்கொலை

பயிரிட்ட நெற்பயிர் சேதம் விவசாயி தற்கொலை

முத்துப்பேட்டை:முத்துப்பேட்டை அருகே, கனமழையால், நெற்பயிர் பாதிக்கப்பட்டதால், மனமுடைந்த விவசாயி விஷம் குடித்துதற்கொலைசெய்துகொண்டார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, உப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், 55. இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். கடந்த, 20 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. மேலும், எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த முனியப்பன்மன உளைச்சலில் இருந்தார்.இந்நிலையில், கடந்த, 2ம் தேதி, வீட்டில் இருந்த, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை