உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / திருவாரூரில் கருணாநிதி சிலை திறப்பு

திருவாரூரில் கருணாநிதி சிலை திறப்பு

திருவாரூர், : திருவாரூரில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆள் உயர வெண்கல சிலையை, நேற்று இரவு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருச்சியில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், நேற்று பகல், 1:30 மணிக்கு திருவாரூர் வந்து, காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் ஓய்வு எடுத்தார். அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், மாலை, 6:50 மணிக்கு, பவித்திரமாணிக்கத்தில், சாலை பயணத்தை துவங்கினார். முக்கிய வீதிகள் வழியாக வந்து, நாகை - தஞ்சை பைபாஸ் சாலையை, நேற்று இரவு அடைந்தார்.நாகை - தஞ்சை சாலையில் நிறுவப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, சன்னிதி தெருவில் உள்ள, அவரது வீட்டில் நேற்று இரவு தங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை