உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / திருவாரூரில் மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா

திருவாரூரில் மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா

திருவாரூர்: சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், ஷியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய மூவரும், திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்களது பிறந்த தினம், மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவாக, ஆண்டுதோறும் திருவாரூரில் நடக்கிறது.நடப்பு ஆண்டு, ஏப்., 29ல், மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா முத்துசுவாமி தீட்சிதர் இல்லத்தில் துவங்கியது. அன்று முதல், பல இசை கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இறுதி நாளான நேற்று காலை, மதுரை சேஷகோபாலன் தலைமையில், பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு, இசை கலைஞர்களின் நாதஸ்வரம், தவில் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு, பாட்டு, வயலின், மிருதங்கம் போன்ற இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை