மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து தனி தாசில்தார் மரணம்
02-Nov-2024
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், தேசிய நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு, தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர், ராஜராஜேந்திரன், 52. இவர், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா, கன்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், இரண்டு மாதங்களாக, திருத்துறைப்பூண்டியில், தன் அலுவலகத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார்.தீபாவளிக்கு, சொந்த ஊருக்கு செல்லவில்லை. நேற்று காலை, அவரது உதவியாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, ராஜராஜேந்திரன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த, திருத்துறைப்பூண்டி போலீசார், ராஜராஜேந்திரனின் உடலை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Nov-2024