உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குட்கா வழக்கில் பேரம் காத்திருப்பில் இன்ஸ்பெக்டர்

குட்கா வழக்கில் பேரம் காத்திருப்பில் இன்ஸ்பெக்டர்

துாத்துக்குடி:குட்கா புகையிலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் பணம் கேட்டு பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.துாத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ். குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் பணம் கேட்டு பேரம் பேசியுள்ளார். இது குறித்து அதிகாரிகளுக்கு வந்த புகாரின் பேரில் திருநெல்வேலி டி.ஐ.ஜி., மூர்த்தி, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.இதேபோல துாத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தராக பணிபுரியும் சிவக்குமார், கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் சந்தனகுமார்ஸ்பிக்நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதி இன்றி மதுபானம் விற்றதாக ஒருவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ. 30 ஆயிரம் கேட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ