மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
துாத்துக்குடி : துாத்துக்குடி ---- திருநெல்வேலி இடையே 47 கி.மீ துார நான்குவழிச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தாமிரபரணி ஆற்றின் மீது வல்லநாடு பகுதியில் 2013ல் பாலம் கட்டப்பட்டது.பாலம் திறக்கப்பட்டதில் இருந்தே தரமாக கட்டப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. பாலத்தில் பல இடங்களில், 9 முறை சேதம் அடைந்ததால், சீரமைப்பு பணிக்காக, 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் ஐந்து மாதங்களுக்கு முன் முடிவடைந்து, பாலம் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், 10வது முறையாக பாலத்தின் தென்பகுதியில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். மீண்டும்அந்த பாலம் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன் டில்லியில் இருந்து வந்த மத்திய சாலை ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள்,பாலத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர். தொடர்ந்து, பாலத்தை சீரமைக்க 13 கோடி ரூபாயில் பணி நடந்தது. பாலத்துக்கு அருகே உள்ள 125 ஆண்டு பழமையான பாலம், சிறிய சேதம் கூட ஏற்படாமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. ஆனால், புதிய பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைவதால், அதன் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025