உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 7ம் வகுப்பு மாணவன் தாய் கண்முன் பரிதாப பலி

7ம் வகுப்பு மாணவன் தாய் கண்முன் பரிதாப பலி

துாத்துக்குடி : துாத்துக்குடி, ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த பொன்ராஜ் -- தமிழ்ச்செல்வி தம்பதி மகன் சுனில் காளிதாஸ், 14; ஏழாம் வகுப்பு மாணவன். பள்ளி ஆசிரியை திருமணத்தில் பங்கேற்பதற்காக சுனில் காளிதாஸ், தாய் தமிழ்ச்செல்வியுடன் டூ - வீலரில் சென்றார்.அப்போது, நான்காம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டூ - வீலரில் பின்னால் அமர்ந்திருந்த சுனில் காளிதாஸ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி சக்கரத்தில் சிறுவன் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். துாத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ