உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மீண்டும் பள்ளம்... மீண்டும் பேஜ் ஒர்க்... வல்லநாடு பாலத்தில் தொடரும் அவலம்

மீண்டும் பள்ளம்... மீண்டும் பேஜ் ஒர்க்... வல்லநாடு பாலத்தில் தொடரும் அவலம்

துாத்துக்குடி:துாத்துக்குடி - திருநெல்வேலி இடையே 2004ல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்த இந்த பணிகள், கால தாமதம் காரணமாக கூடுதலாக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.2012ல் பணிகள் நிறைவடைந்து பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. கனரக வாகனங்களின் அதிகரிப்பால் 2017ல் பாலத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய பள்ளம் விழுந்தது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர். பள்ளத்தில் கான்கிரீட் கலவை போடப்பட்டு போக்குவரத்து துவங்கியது. தரமாக கட்டப்படவில்லை என புகார், 9 முறை சேதம் அடைந்தது என்பதால் சீரமைப்பு பணிக்காக 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் ஐந்து மாதங்களுக்கு முன் முடிவடைந்து பாலம் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.பத்தாவது முறையாக பாலத்தின் தென் பகுதியில் மே 26ல் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பள்ளத்தை நிரப்பினர். ஆனால், மீண்டும் அதே இடத்தில் 11வது முறையாக நேற்று பள்ளம் ஏற்பட்டது. இதனால், மீண்டும் 'பேஜ் ஒர்க்' பணி துவங்கி உள்ளது.பாலத்தில் பள்ளம், அதிர்வு ஏற்படுவதற்கு தரமான கட்டுமானம் இல்லாததே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை