உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கோவிலில் ஆவணி திருவிழா துவக்கம்

திருச்செந்துார் கோவிலில் ஆவணி திருவிழா துவக்கம்

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோவிலை சேர்ந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல நடந்தன. கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காலை, 5:00 மணிக்கு கொடியேற்றம் துவங்கியது. 5:15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க ஹரிஹர சுப்பிரமணிய சிவாச்சாரியார் கொடியேற்றினார். பக்தர்கள், 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என, முழங்கினர். கொடிமரத்திற்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. வண்ண மலர்களாலும், தர்ப்பைப்புற்களால் அலங்கரிக்கப்பட்டு பட்டு சாத்தப்பட்டது. காலை, 6:30 மணிக்கு வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டு கொடிமரத்திற்கு மஹா தீபாராதனை நடந்தது. விழாவின் பத்தாம் திருவிழாவான செப்., 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை