மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் எழுதிய தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான லெட்சுமிபதிக்கு அனுப்பிய மனு:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக சுவர் விளம்பரம் எழுதி உள்ளனர்.துாத்துக்குடி, திருச்செந்துார், ஆறுமுகநேரி, ஆழ்வார்திருநகரி பஜார் என பல பகுதிகளிலும் சுவர் விளம்பரம் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவர் விளம்பரங்கள் எழுதுவதற்கான தொகையை தி.மு.க., வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025