மேலும் செய்திகள்
காஸ் சிலிண்டர்கள் திருட்டு: இருவர் கைது
08-Sep-2026
தலைமை ஆசிரியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை
08-Sep-2026
தாமிரபரணி தண்ணீர் கேட்டு மறியல் செய்த விவசாயிகள்
04-Sep-2026
துாத்துக்குடி:தென்காசி மாவட்டம், குலசேகரகோட்டையை சேர்ந்தவர் பசுபதிமாரி, 28. கடந்த 2017ல் காவலர் பணியில் சேர்ந்த இவர், ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சில நாட்களாக துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் தங்கி, கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 5ம் தேதி பசுபதிமாரி ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டபோது, கீழ வல்லநாடு வாட்டர் டேங்க் அருகே திடீரென மயங்கி விழுந்தார். உடன் இருந்த காவலர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார்.இதுதொடர்பாக, முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் விசாரணை செய்கிறார். உயிரிழந்த பசுபதிமாரிக்கு மாரிச்செல்வி என்ற மனைவி உள்ளார்.
08-Sep-2026
08-Sep-2026
04-Sep-2026