உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி சாலையில் பதிக்கப்பட்ட ஆணிகள்

துாத்துக்குடி சாலையில் பதிக்கப்பட்ட ஆணிகள்

துாத்துக்குடி,:துாத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட புது கிராமத்தில், ஒரு வீட்டின் முன்பு சிமென்ட் செங்கல் வைத்து சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 அடி அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பகுதியில், 500-ம் மேற்பட்ட இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டுஉள்ளன.இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் மக்கள் கேள்வி எழுப்பியபோது முறையான பதிலை தெரிவிக்கவில்லை.வீட்டின் ஜன்னல் தெருவை விட கீழே இருப்பதாகவும், அந்த வழியாகச் செல்வோர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் விடுமுறையில் சென்றுள்ளார் எனக் கூறியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.எனவே, வீட்டின் முன்பு சாலையில் பதிக்கப்பட்டுள்ள ஆணிகளை உடனே அகற்ற வேண்டும். இல்லை என்றால், பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ