மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி: தமிழகத்தில் விரிவாக்க பணிகளின் போது, மின்கம்பம் நடுவதற்கு, மின் நுகர்வோரிடம் எவ்விதகட்டணமும் வசூலிக்கக் கூடாது என, விதிகள் உள்ளன. இருப்பினும், மின்வாரிய அதிகாரிகள் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி, புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளநிலை மின் இன்ஜினியர் தேவசுந்தர்ராஜ், மின்கம்பம் நடுவதற்கு நுகர்வோரிடம் பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.மின்நுகர்வோர் கூறியதாவது: விரிவாக்க பணிகளுக்கு அரசு வழங்கும் பணத்தை அதிகாரிகள் செலவு செய்வது இல்லை. மாறாக, மின் நுகர்வோர்களிடம் பணம் வசூலித்து மின்கம்பங்களை நடுகின்றனர்.பேரம் பேசி அதிகாரிகள் பணம் பெறுகின்றனர். அவர்கள் மீது மின் வாரிய உயரதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025