உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வந்தே பாரத் மீது கல்வீச்சு; நொறுங்கியது கண்ணாடி

வந்தே பாரத் மீது கல்வீச்சு; நொறுங்கியது கண்ணாடி

துாத்துக்குடி : நெல்லையில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.நெல்லையில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, 6:35 மணியளவில் துாத்துக்குடி மாவட்டம், கடம்பூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. தங்கம்மாள்புரம், எல்.சி., கேட் பகுதியில் ரயில் சென்ற போது, மர்ம நபர்கள் கல்வீசியதில், சி1 பெட்டியில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயிலின் கார்டு மதுரை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், துாத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !