உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஒரு மாதமாக தண்ணீர் இல்லை சாத்தான்குளத்தில் பரிதாப நிலை

ஒரு மாதமாக தண்ணீர் இல்லை சாத்தான்குளத்தில் பரிதாப நிலை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. முதல் வார்டைச் சேர்ந்த கிருஷ்ணன் கோவில் தெரு, மேல சாத்தான்குளம், சண்முகம் நகரம், இட்டமொழி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில், ஒரு மாதமாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை.குடிநீர் வினியோகம் தொடர்பாக டவுன் பஞ்., நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மனு கொடுத்தும் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இந்நிலையில், பெண்கள் நேற்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின், சாத்தான்குளம் டவுன் பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாத்தான்குளம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கந்தவல்லி, கவுன்சிலர் சுந்தர் ஆகியோர் பெண்களுடன் பேச்சு நடத்தினர்.பத்து நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அலட்சியமாக செயல்படும் டவுன் பஞ்., நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ