துாத்துக்குடி ஏர்போர்ட் நவீனமயம்
துாத்துக்குடி விமான நிலையத்தில், புதிய முனையம் அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில், நவீன வசதிகளுடன் கூடிய 'ரேடார்கள்' மற்றும் இணைப்பு சரி பார்க்கும் பணிகள் நடக்கின்றன. இவை இம்மாத இறுதிக்குள் முடிவடையும். ஓடு பாதையில் விமானங்கள் தரையிறங்க வசதியாக 'நேவிகேஷன் லைட்ஸ்' பொருத்தப்பட்டுள்ளன. தற்போது துாத்துக்குடியில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூரு வரை மட்டுமே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. பணிகள் முடிந்ததும், புதிய விமான நிறுவனங்கள், பல்வேறு நகரங்களுக்கு சேவை வழங்கும். - ராஜேஷ்,துாத்துக்குடி விமான நிலைய இயக்குனர்.