உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காட்டில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காட்டில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. கயத்தாறு, சவலாப்பேரி காட்டுப்பகுதியில், குடிசை அமைத்து ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, அங்கு சோதனை செய்தனர். அப்போது, 29 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.அந்த மூட்டைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு பைக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கால்நடை தீவனங்களுக்காக அதிகளவில் கொண்டு செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே, ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக, சுற்று வட்டாரங்களை சேர்ந்த 33 முதல் 59 வயது வரையிலான ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை