பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் கைது
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், அயன்ராஜாபட்டியில் செயல்பட்டு வரும் பாலாஜி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. நத்தத்துப்பட்டி மாரியம்மாள், 45, என்பவர் உயிரிழந்தார். விபத்து குறித்து, விசாரணை நடத்திய மாசார்பட்டி போலீசார், ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, பரத் உட்பட, 7 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில், ராஜபாண்டி, மாரீஸ்வரன், ரேவதி ஆகிய மூவர், நேற்று கைது செய்யப்பட்டனர்.