மேலும் செய்திகள்
நண்பனை கிணற்றில் வீசிய இருவர் கைது
08-Aug-2025
துாத்துக்குடி:அனல்மின் நிலைய கான்ட்ராக்டர் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி, அண்ணாநகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன், 52; அனல்மின் நிலைய பெயின்டிங் கான்ட்ராக்டர். சமீபத்தில் வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்புக்கு குறைந்த தொகையை குறிப்பிட்டு பாலமுருகன் டெண்டருக்கு விண்ணப்பித்தார். இந்நிலையில், பாலமுருகனின் வீட்டிற்கு நேற்று ஆயுதங்களுடன் புகுந்த சிலர், அங்கிருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். இதுதொடர்பாக, தென்பாகம் காவல் நிலையத்தில் பாலமுருகன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில், 30 ஆண்டுகளாக ஒப்பந்த பணி செய்து வருகிறேன். சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட பெயின்டிங் டெண்டருக்கு விண்ணப்பித்தேன். அதே பணிக்கு விண்ணப்பித்த துாத்துக்குடி, போல்டன்புரத்தைச் சேர்ந்த மாவட்ட தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ் மற்றும் கான்ட்ராக்டர் சண்முகவேல் ஆகியோர் என்னிடம் டெண்டரை வாபஸ் பெற போனில் மிரட்டினர். நான் மறுத்து விட்டேன். இந்நிலையில், என் வீட்டில் தாய் மற்றும் மனைவி, குழந்தைகள் நேற்று தனியாக இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்து மிரட்டிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியுள்ளனர். தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் என் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். புகாரை பெற்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
08-Aug-2025