உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: துாத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்

ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: துாத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்

துாத்துக்குடி: துாத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், தினமும் அதிகாலை 5:00 மணிக்கு சென்று இரவு 9:00 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என, மீன்வளத்துறை உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், வெளிமாவட்ட மீனவர்கள் இரவு நேரத்தில் மீன் பிடிப்பதால் தங்களுக்கு போதிய மீன் கிடைப்பது இல்லை என, விசைப்படகு மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், பிற மாவட்டங்களில் உள்ளது போல துாத்துக்குடியிலும், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி, விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.இதனால், துாத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், 265 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன; 5,000 மீன்பிடி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கி மீன்பிடிக்க தடை விதித்தது ஏன்?

துாத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 1974ம் ஆண்டு முதல் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களிடையே, கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக பிரச்னை நிலவி வந்தது. கடந்த 1983ல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 190 நாட்டு படகுகள் சேதமடைந்தன.இதையடுத்து, இருதரப்பினரிடையே நடந்த பேச்சில் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9:00 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. அரசு, அந்த முடிவை சட்டமாக அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ