உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர்:திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி மேலப்பாளையத்தில் திரையரங்கில் குண்டு வீசிய இடத்தை பார்வையிட சென்ற இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் கைது செய்யபட்டதை கண்டித்து இந்து முன்னணியின் சார்பில் திருச்செந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும்நெல்லை மாநகர காவல் துறை கமிஷனரை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டதுஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகர தலைவர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்கள் சுடலைமுத்து, ஜெயராம் திவான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாடி முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜு, நகர செயலாளர்கள் முனியாண்டி, கிருஷ்ணன், இசக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை