மேலும் செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
18-Sep-2024
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கடலில் புனித நீராடிவிட்டு, நாழிக்கிணற்றில் குளித்த பிறகு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். பவுர்ணமி என்பதால் நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.கோயில் வளாகம், வள்ளி குகை பகுதி, நாழிகிணறு, பஸ் நிலையம் பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே, பவுர்ணமி என்பதால் நேற்று கடல் வழக்கத்தைவிட சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.கடற்கரை பகுதியில் உள்ள நாழிக்கிணற்றில் இருந்து வைகுண்டர் அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் துாரத்திற்கு 100 கடல் உள்வாங்கி காணப்பட்டது.பச்சை பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தபோதிலும், அதன் மேல் அமர்ந்த பக்தர்கள் பாசி படிந்த பாறை வழுக்கும் என்ற ஆபத்தை உணராமல் ஆனந்தமாக குளியல் போட்டனர். சிலர் பாறைகள் மீது நின்று செல்பி எடுத்தபடி குளித்து மகிழ்ந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
18-Sep-2024