மேலும் செய்திகள்
5 வயது சிறுவனை கடித்த தெரு நாயால் அச்சம்
28-Sep-2025
துாத்துக்குடி: திருச்செந்துார் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த, 11 பேரை வளர்ப்பு நாய் கடித்து குதறியது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே கீழநாலுமூலைக்கிணறை சேர்ந்தவர் சங்கரன். இவரது வீட்டின் வளர்ப்பு நாய், நேற்று திடீரென வீட்டில் விளையாடி கொண்டிருந்த சங்கரனின், 10 வயது மகன் மணிசர்மாவை கடித்தது. அங்கிருந்தவர்கள் நாயை விரட்ட முயற்சித்தனர். வெறிபிடித்தது போல செயல்பட்ட நாய், அதே கிராமத்தை சேர்ந்த அன்பு, நாக தினேஷ் உட்பட 11 பேரை கடித்தது. அப்பகுதியில் ஆறு ஆடுகளையும், ஒரு மாட்டையும் கடித்து தப்பியோடியது. காயமடைந்த 11 பேருக்கும் திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
28-Sep-2025