உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குருமூர்த்தி, 35, நேற்று மிளகாய் மற்றும் வெங்காய பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டார். அவருடன் மூன்று பெண்கள் உட்பட 8 பேர் பணி செய்தனர். திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனகா, 34, சென்னம்மாள், 29, வசந்தா, 48, ஆகியோர் காயமடைந்தனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு காது கேட்கும் திறன் முழுமையாக பாதிக்கப்பட்டது டாக்டர்கள் பரிசோதனையில் தெரியவந்தது. காடல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை