உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பைக் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு அபராதம்

பைக் ஓட்டிய சிறுவனின் தந்தைக்கு அபராதம்

துாத்துக்குடி: மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லக்கூடாது என, விதிமுறை உள்ளது. துாத்துக்குடி, மேலசண்முகபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த, அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்து, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !