உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விமானம் புறப்பாடு தாமதம்; காத்திருந்த முதல்வர்

விமானம் புறப்பாடு தாமதம்; காத்திருந்த முதல்வர்

துாத்துக்குடி : கன்னியாகுமரியில் இரு நாட்கள் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் நேற்று விமானத்தில் சென்னை திரும்புவதற்காக துாத்துக்குடி வந்தனர்.அவர்கள் பயணம் செய்ய வேண்டிய விமானம் நண்பகல் 1:15 மணிக்கு புறப்பட வேண்டியது; ஆனால், ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் 2:15 மணிக்கு புறப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, ராஜா உள்ளிட்டோரும், தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் பயணம் செய்தனர்.தாமதம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். நேற்றும் அது போல பராமரிப்பு பணிகள் நடந்ததால், துாத்துக்குடியில் இருந்து விமானம் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு கூறினர்.கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், மதியம் 12:15 மணிக்கே துாத்துக்குடி வந்துவிட்டார். விமானம் புறப்பட தாமதம் ஆகும் என்பதால், அவர் தனியார் விடுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். பின், மதிய உணவு சாப்பிட்ட அவர், சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி