மேலும் செய்திகள்
தங்க இ.டி.எப்.,களில் முதலீடு அதிகரிப்பது ஏன்?
21-Oct-2024
மீண்டும் தங்கத்தேர்திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் மாலை 6:00 மணிக்கு, பிரகாரத்தை சுற்றி தங்கத்தேர் இழுத்து வருவது வழக்கம். கோவில் வளாகத்தில், 300 கோடி ரூபாய் செலவில், பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருவதால், ஜூலை 17 முதல், தங்கத் தேரை இழுப்பது ரத்து செய்யப்பட்டது.கோவிலை சுற்றி வடக்கு மற்றும் கிழக்கு கிரி பிரகார தரைத்தள பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து, கந்த சஷ்டிக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் நவ., 2 முதல், 6ம் தேதி வரை, தினமும் மாலையில் தங்கத்தேர், பிரகாரத்தை சுற்றி வரும் என, கோவில் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்களுக்கு பின், கோவிலில் மீண்டும் தங்கத்தேர் புறப்பாடு, பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கந்த சஷ்டி விழா நிறைவடைந்த பின், திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், மீண்டும் தங்கத்தேர் புறப்பாடு துவங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
21-Oct-2024