உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கிராமங்களிலும் கார் ரேஸ் கட்டடத் தொழிலாளி பரிதாப பலி

கிராமங்களிலும் கார் ரேஸ் கட்டடத் தொழிலாளி பரிதாப பலி

துாத்துக்குடி:திருச்செந்துார் அருகே ஓடக்கரை பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ், 41; இரவு டூ - வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காயல்பட்டினம் வாவூ மகளிர் கல்லுாரி அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த கார் மோதியதில், சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்டார்.கார் சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. அவ்வழியே சென்றவர்கள் சுரேஷை மீட்டு, திருச்செந்துார் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். போலீசார் கூறியதாவது:உடன்குடி மற்றும் பரமன்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏழு வாலிபர்கள், இரு கார்களில் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு சாப்பிட்டு, ஊர் திரும்பும் போது, ரேஸில் ஈடுபட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டது.இது தொடர்பாக, பரமன்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜெகுபேட்டர்சன், 23, உடன்குடி வினோத் சிவா, 21, ஆகியோரை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.துாத்துக்குடி மாவட்டத்தில், இரவு நேரங்களில் வாலிபர்கள் சிலர், கார் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. சில மாதங்களுக்கு முன், குரும்பூர் பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை