உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 திரும்ப கேட்டவர் கொலை

 காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 திரும்ப கேட்டவர் கொலை

சாத்தான்குளம்: டாஸ்மாக் பாரில், காலி பாட்டிலை கொடுத்து, 10 ரூபாய் திரும்ப கேட்ட வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து, 25. இவர், நேற்று முன்தினம் இரவு, தச்சைமொழியில், மது வாங்கி குடித்த பின், காலி பாட்டிலை திரும்ப கொடுத்து, 10 ரூபாய் கேட்டுள்ளார். 'ஸ்நாக்ஸ்' வாங்கி கொள்ள டாஸ்மாக் பாரில் கூறியுள்ளனர். சுடலைமுத்து மற்றும் சிலர் இதற்கு மறுத்ததால், பலருக்கும் பாரில் இருந்த ஊழியர்கள், 10 ரூபாய் வழங்கியுள்ளனர். நேற்று காலை, சுடலைமுத்து, காந்திநகரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பார் ஊழியர்கள் இருவர், சுடலைமுத்துவை ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை செய்து தப்பினர். இதனால், அவரது உறவினர்கள் மறியல் செய்தனர். எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி, பார் ஊழியர்களான சுந்தர், 42, ஜெகதீஷ், 24, ஆகியோரை கைது செய்தனர். அதன் பின், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ