மாணவியிடம் சீண்டல் முதியவருக்கு காப்பு
துாத்துக்குடி: எட்டாம் வகுப்பு மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பேய்குளம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் பிச்சை, 71. பொங்கல் பண்டிகை நாளில், அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, சக மாணவியரிடம், தன்னிடம் அந்த முதியவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கூறினார். பின், அந்த தகவலை, தலைமையாசிரியரிடம் மாணவியர் கூறினர். அவரது புகாரில், சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீசார், தேவராஜ் பிச்சை மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.