உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கிணற்றில் பாய்ந்தது ஆம்னி வேன் ஒரே குடும்பத்தில் 5 பேர் மூழ்கி பலி

கிணற்றில் பாய்ந்தது ஆம்னி வேன் ஒரே குடும்பத்தில் 5 பேர் மூழ்கி பலி

துாத்துக்குடி : சாலையோரம் இருந்த தரைமட்ட கிணற்றில், ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில், மூவர் உயிர் தப்பிய நிலையில், ஒரே குடும்பத்தில் 5 பேர் மூழ்கி பலியாகினர்.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா, வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள துாய பரிசுத்த சர்ச் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், ஆம்னி வேனில் நேற்று வந்து கொண்டிருந்தனர். மோசஸ், 50, வேனை ஓட்டினார். சாத்தான்குளம் தாலுகா, மீரான்குளம் அருகே வேன் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத தரைமட்ட கிணற்றுக்குள் பாய்ந்தது. 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில், தண்ணீர் அதிகளவில் இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அதில், ஷேனி கிருபாகரன், 25, ஜெஸிட்டா எஸ்தர், 31, ஹெர்சோம், 30, ஆகியோர் காரில் இருந்து வெளியே வந்து கிணற்றுக்குள் தத்தளித்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டனர். லேசான காயங்களுடன் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்காருக்குள் சிக்கிய மோசஸ், 50, அவரது மனைவி வசந்தா, 45, ரவி, 25, மீட்கப்பட்ட ஹெர்சோமின் ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், ஹெத்சியா, 28, ஆகியோர் வெளியே வர முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சாத்தான்குளம், திசையன்விளை, திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள், இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உதவியோடு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் மூழ்கிய காரையும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இறந்தவர்களின் குடும் பத்திற்கு தலா ௩ லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை