உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் ரூ.60,000 இழப்பீடு தர உத்தரவு

நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் ரூ.60,000 இழப்பீடு தர உத்தரவு

ஆறுமுகநேரி: துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த சத்குரு, துாத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்சில் பயணித்த போது, பேயன்விளை நிறுத்தத்தில் இறங்க டிக்கெட் எடுத்தார். பேயன்விளை நிறுத்தம் வந்தபோது, பஸ்சை நிறுத்தாமல், 3 கி.மீ. தொலைவில் உள்ள காயல்பட்டினம் நிலையத்தில் சத்குருவை இறக்கி விட்டு, தகாத வார்த்தையால் ஊழியர்கள் திட்டிஉள்ளனர். இது தொடர்பாக, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சத்குரு வழக்கு தொடர்ந்தார்.விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர்கள், சத்குரு மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை, 50,000 ரூபாய், வழக்கு செலவுக்கு, 10,000 ரூபாய் என மொத்தம், 60,000 ரூபாய் வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டனர். வழக்கு தொடர்ந்த நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் வழங்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை