உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கடலில் 6 மீனவர்கள் தத்தளிப்பு அதிகாரிகள் மீது உறவினர்கள் புகார் அதிகாரிகள் மீது உறவினர்கள் புகார்

கடலில் 6 மீனவர்கள் தத்தளிப்பு அதிகாரிகள் மீது உறவினர்கள் புகார் அதிகாரிகள் மீது உறவினர்கள் புகார்

துாத்துக்குடி:துாத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 21ம் தேதி சதீஷ்குமார், 34, என்பவரது படகில், அவருடன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 31, அல்போன்ஸ், 46, ஜூடு, 41, சுதர்சன், 33, ஜார்ஜ், 37, ஆகிய 6 பேர் ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.அவர்கள், 26ம் தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக அவர்கள் திசை மாறி சென்றிருக்கலாம் என, கூறப்படுகிறது.இதற்கிடையே, தொலைத்தொடர்பு கருவிகள் வாயிலாக அவர்களை மற்ற மீனவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர்.அவர்கள் ஆறு பேரும் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக மட்டும் தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் மூன்று நாட்டுப்படகுகளில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திய போதிலும் நடுக்கடலில் தத்தளித்து வரும் மீனவர்களை மீட்கும் பணியில் சக மீனவர்களே ஈடுபட்டுள்ளனர்.அப்பகுதி மீனவர்கள் மற்றும் மக்கள் கூறியதாவது:வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை வருவதற்கு முன்னரே 21ம் தேதி ஆறு பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டனர். அவர்களை மீட்க கடலோர காவல் படையினரின் உதவி தேவை என, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அவர்கள் முறையான பதிலை தெரிவிக்கவில்லை.வானிலை எச்சரிக்கை இருந்த போதிலும், ஆறு பேரும் ஏன் கரை திரும்பவில்லை என, அதிகாரிகள் எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததாலேயே சக மீனவர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்து ஹெலிகாப்டர் வாயிலாக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை