உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புனித வெள்ளிக்கு டாஸ்மாக் விடுமுறை விட கோரிக்கை

புனித வெள்ளிக்கு டாஸ்மாக் விடுமுறை விட கோரிக்கை

துாத்துக்குடி:புனித வெள்ளியன்று தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க, துாத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கையில், 'ஏப்., 18 புனித வெள்ளியன்று யேசு மரித்த தினமாகும். திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவதை போல கிறிஸ்துவர்களுக்கு முக்கிய தினமான புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !