மாணவி பாலியல் புகார் பேராசிரி யரிடம் விசாரணை
எட்டையபுரம்:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. 292 மாணவியர் படிக்கின்றனர்; 121 மாணவியர் கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கின்றனர். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என, 59 பேர் பணியாற்றுகின்றனர்.துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது முதலாமாண்டு மாணவிக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர், பாலியல் தொல்லை கொடுப்பதாக அந்த மாணவி கல்லுாரி முதல்வரிடம் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.இதையடுத்து, கல்லுாரி முதல்வர் பேபி லதா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின், விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய போலீசார், புகார் அளித்த மாணவி, பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.புகார் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.