உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சாத்தையில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சாத்தையில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சாத்தான்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். தலைவர் தங்கராஜ் வரவேற்றார். செயலாளர் நோபுள்ராஜ், சாத்தான்குளம் லயன்ஸ் கிளப் சென்ற ஆண்டில் செய்த நலத்திட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் வின்சென்ட் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுநர் முகம்மதுஅலி, புதிய நிர்வாகிகளாக தலைவர் கனகராஜ், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பள்ளி இறுதித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இலவச சீருடை, பெட்ஷீட், தையல்மிஷின், இஸ்திரிப்பெட்டி மற்றும் கம்ப்யூட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை