உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கந்துவட்டி மிரட்டல் பைனான்சியர் தற்கொலை

கந்துவட்டி மிரட்டல் பைனான்சியர் தற்கொலை

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி, 40. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மனைவி சித்ரா, இரு மகள்கள் உள்ளனர்.ஆறுமுகபாண்டி தொழில் முதலீட்டிற்காக பல்வேறு நபர்களிடம், 1 கோடியே 34 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். பலருக்கும் கடனை திரும்ப கொடுத்துள்ளார். இருப்பினும் சமீப காலமாக தொழில் முடக்கத்தால் வட்டி கொடுக்க முடியவில்லை.கந்துவட்டிக்காரர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். மனமுடைந்தவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஏற்கனவே கந்துவட்டிக்காரர்கள் மீது கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் லட்சுமி மில் முன்மறியல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை