உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மத போதகருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்

மத போதகருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்

துாத்துக்குடி:'இரு தரப்பினர் இடையே மோதலை துாண்டும் வகையில் செயல்படும், கிறிஸ்துவ மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாமஸ்நகர், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ சர்ச் கட்டுப்பாட்டில், ஐந்து கிறிஸ்தவ சபைகள் செயல்படுகின்றன. சர்ச் மற்றும் சபைகளுக்கு மதபோதகர் தனசிங் என்பவர் தலைவராக செயல்படுகிறார். அவர் மீது, காணிக்கை பணத்தை தன்னிச்சையாக செலவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. சர்ச்சில் ஆராதனை நடக்கும் நேரத்தில் மோசமான வார்த்தைகளை பேசுவதாகவும், இரு பிரிவினருக்கிடையே மோதலை துாண்டும் வகையில் செயல்படுவதாகவும், தாமஸ் நகர் சேகர சர்ச் பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கிறிஸ்துவ மக்கள் சர்ச் முன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவரை மாற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ